ஞாயிறு

ஞாயிறுக்கும் ஞாயிறுக்கும் மத்தியில்
ஞாயிறொன்று இல்லாதது
ஞாலத்தில்
எனக்குமட்டுமேயான பெருவருத்தம்

துறவாடைக்கு
கிழமைகள் பற்றி
கவலைகள் இருந்ததில்லை

அப்படித்தான்
வெற்றாடைக்கும்

ஆனபோதும்
ஞாயிறுக்கும் ஞாயிறுக்கும் மத்தியில்
ஞாயிறொன்று இல்லாதது
ஞாலத்தில்
எனக்குமட்டுமேயான பெருவருத்தம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=