முழுமை

உணர்ச்சிக் கற்பனைகள் வெடித்தபோது
பாதியாக இருந்தேன்

வெட்கம் கவியும்
புதுநாள் வாசனைப் பொழுதில்
பாதியில் பாதியாகிப் போனேன்

நாண நாணயெழும் எழுச்சிக்கு
ஒருபோதும்
ஒற்றை வடிவம் பொருந்துவதில்லை

உணர்ச்சி தணிக்க எத்தனிக்கையில்
உள்ளொன்று உரசியுரசி ஊடுருவ
பாதியில்
பாதியில்
பாதியாக

யாரோ ஒருவரின்
பாதியில்
பாதியில்
பாதி
யாதொரு நெருடலுமின்றிப் பொருந்தியது

பாதி நானும்
பாதி யாரோவுமாக
முழுமையாகிப்போனோம்
முன்விட அழகாக
சற்று பொருத்தமாக

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=