தோற்றுப்போன விரல்

திருட்டு மாங்காய்
திருட்டு சந்தோசம்
எழுத்தளவு தூரம்

வைகறையலரும் பெயரிலாப் பூவுக்கு
அழகதுவே

இருமுனை விளையாட்டில்
இருவரும் வெற்றிபெற
இதயத்தோடு சேர்ந்து
இதழ்களும் அனுமதிப்பதில்லை

குருதிசுவையறிந்த உதடுக்கு
போதுமாய் இருந்தது
உயிர்த்தண்ணீரின் உஷ்ணம்

புணர்வை எழுதியெழுதி
தோற்றுப்போன விரலுக்கு
உண்மையுரைத்தபோது
நிழலும் வீசியெறிந்தது
காகிதத்தோடு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=