என்னொலி

ஒளியை
அனுமதியின்றி சிறைபிடித்த இலைகள்
யாதொரு அதட்டலின்றி
கேட்டது

சொற்கள் விழுங்காமல்
காற்றை சொன்னேன்

கோபமின்றி உதடுகடித்து
வட்டு போட்டது

பலம் கொண்டமட்டும்
கைகள் அகலவிரித்து
திமிறி
திசை கிழித்து
ஒளி விடுவித்தேன்

உர்ரென்ற
சூட்டிசைக் கேட்டு
உள்ளம்
படபடத்து
தனித்தன

இல்லாததில் விழுந்து
இருப்பதில் எழும்போது
இசையாகும் என்னொலி
இருப்பதில் விழுந்து
இல்லாததில் எழுந்தது
முதல் தடவையாக

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=