தாயாக மனம் தவித்தபோது
தந்தையாகி மொழிந்தாள்
திமிர்த்து
மரமாக கைகள் விரிந்தபோது
நிழலாக வழிந்தாள்
குளிர்த்து
எனினும்
இசையாக இருப்பு கலந்தபோது
காற்றாகி இனியாமல்
நேற்றாகி கசந்தாள்
வலித்து
ஆனபோதும்
இன்மையாக உயிர்வு குலைந்தபோது
உண்மையாக முளைத்தாள்
துளிர்த்து