சொல்லன்றி எதுவுமற்றவன்! – 303

நீங்கள் ஒரு பதிப்பாளரும் கூட. அவ்வகையில் மற்ற பதிப்பகத்தின் தரமில்லா நூல்களின் அதிக விலையை பார்க்கையில் என்ன தோன்றும்?

நல்லக்கேள்வி.

உண்மையில் மனத்துக்குள் அசிங்கமாக திட்டுவேன். கூடவே, ‘இந்த புத்தகத்த மத்தவங்க காசு கொடுத்து வாங்கணும்னு நெனச்சுதான் இந்த விலைய வைத்திருக்காங்களா; இந்தத் தரத்துல உருவாக்கி இருக்காங்களா? இதே புத்தகத்த இவங்க காசு கொடுத்து முதல்ல வாங்குவாங்களா?’ என்றும் கேட்டுக் கொள்வேன்.

வரலாற்றில் எத்தனை எத்தனையோ பதிப்பகங்களும், பதிப்பாசிரியர்களும் நல்ல தரமான புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு வெளியிட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். அதை ஒரு தொழிலாக மட்டுமின்றி சேவையாகவும்; கடமையாகவும் செய்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு பணம் பணம் பணம் என்று பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு பல பதிப்பகங்களும், பதிப்பாசிரியர்களும் எந்தக் கீழ்மைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 302

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=