சொல்லன்றி எதுவுமற்றவன்! – 364
மிகச் சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே அமைந்திட்ட மனைவியர் போல உங்களுக்கு கோமதி என்று சொல்லலாமா?
நிச்சயமாக சொல்லலாம். அவளது கலையிலக்கிய ஈடுபாடும், அதுகுறித்த புரிதலும் இல்லையென்றால் என்னால் இந்த அளவுக்கு உட்கார்ந்து சுதந்திரமாக அடுத்தடுத்த படைப்புகளை எழுதியிருக்க முடியாது; பயணிக்கப்போகும் இடங்கள் குறித்து எண்ணமுடியாது.
இன்றைக்கு எதை எதையோ நோக்கி எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கையில், ஒருவரது கலை இலக்கிய ஈடுபாடுகளுக்கு; கனவுகளுக்கு பக்கபலமாக இன்னொருவர் இருப்பது என் பொருத்தவரை வரம்தான். அந்த வகையில் கோமதி எனக்குக் கிடைத்திட்ட பெருவரம். அவளது உடனிருப்பு எனக்கு பெரும்பலம். காதல் ததும்பும் அவளது அருகமை எனக்கான பெருநம்பிக்கை.
மொத்தத்தில் எனது அன்புக்குரிய; காதலுக்குரிய முதல் முக்கிய வாசகி கோமதி என்பேன்.
[இன்னும்]
*