சொல்லன்றி எதுவுமற்றவன்! – 362
இவ்வளவு மெனக்கெட்டு குறுகிய காலத்தில் இத்தனை படைப்புகள் எழுதியிருக்கிறீர்கள். அதற்கான அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறீர்களா?
இல்லை. அதேநேரம், அங்கீகாரத்தை எதிர்பார்த்து நான் எதையும் செய்யவில்லை. அப்படி செய்ய ஆரம்பித்தால் என் எண்ணம் முழுக்க அதிலேதான் இருக்கும். அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்கமுடியாது.
இன்னொரு முக்கியமான விஷயம். அங்கீகாரங்களை தேடிப் போகிறவர்கள்; வாங்குகிறவர்கள் ஒருபோதும் நல்ல படைப்பாளியாக இருக்கமுடியாது.
அங்கீகாரம் என்பது நாம் செய்யும் செயலுக்கு நம்மைத் தேடி வரவேண்டும். அதனை ஆயிரம் பேர் தடுத்திட்டாலும் பரவாயில்லை. அதற்காக வருந்தவோ, உடைந்துபோகவோ மாட்டேன். என்னைத் தேடிவரும் அங்கீகாரம்தான் என் பொருத்தவரை உண்மையான; உயரிய அங்கீகாரம்.
[இன்னும்]
*