சொல்லன்றி எதுவுமற்றவன்! – 302
நூல்களும் சொல்லிக் கொள்ளும்படியான தரத்தில் இருப்பதில்லையே?
ஆமாம். அதைப் பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை உள்ளது. என்னிடம் நூறாண்டு பழைமையான நூல்கள் சில இருக்கின்றன. அவையெல்லாம் அத்தனை தரத்தோடு அன்று உருவாக்கினதால்தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அழியாமல் நன்முறையில் இருக்கிறது.
ஆனால், இப்போதோ தரமின்றி எந்த அற உணர்வும் இல்லாமல் நூல்களை உருவாக்கிவிட்டு (அப்போதுதான் அது சீக்கிரம் அழியும். புதிதாக இன்னொன்று காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற வணிக குறுக்குப் புத்தியே இதற்கு காரணம்), அதற்கு சற்றும் நியாயமில்லாத விலையினை மனசாட்சியின்றி வைக்கிறார்கள். இதையெல்லாம் கேட்க; தடுக்க இங்கே யாரும் இல்லை.
[இன்னும்]
*