சொல்லன்றி எதுவுமற்றவன்! – 301

இந்த இடத்தில் இக்கேள்வி அவசியமா தெரியவில்லை, இருந்தாலும் கேட்கிறேன். அரசு நிறுவனங்கள், துறைகள், பல்கலைக்கழகங்கள் வெளியிடும் நூல்கள் சமீப காலங்களில் மிக அதிகமான விலை வைக்கப்படுகிறதே?

ஆமாம். நானும் கவனித்துதான் வருகிறேன். தமிழ் வளர்ச்சித் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை வெளியிடும் நூல்கள் எல்லோராலும் எளிதில் வாங்கக் கூடிய விலையில் இல்லை. எல்லாம் தனியார் பதிப்பகங்களுடன் போட்டிப் போடுவது போல உள்ளது.

நல்ல நல்ல படைப்புகள் குறைந்த விலையில் தரத்துடன் எளிய மக்களிடம்; வாசகர்களிடம்; மாணவர்களிடம் போய் சேர வேண்டும் என்ற நன்நோக்கில் தொடங்கப்பட்டது. ஆனால், தகுதியற்ற நபர்களால் இன்றைக்கு அந்நோக்கம் தலைகீழாக மாறிவிட்டது.

பதிப்புத் துறை சார்ந்த பணிகளில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு வருவதால் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இவர்கள் உருவாக்கி விற்பனைக்கு வைக்கும் நூல்களுக்கு இட்டிருக்கும் விலை என்பது மிக மிக அநியாயம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 300

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=