சொல்லன்றி எதுவுமற்றவன்! – 300

அவ்வாறு பதிப்பிக்க முடியாதபோது அல்லது விரும்பாதபோது அதன் அச்சு உரிமையை வேண்டுவோருக்காவது கொடுக்கலாம் அல்லவா?

கொடுக்கலாம்தான். என்ன செய்வது? அரசு சார்ந்த இடங்களில் இப்படி பல வேலைகள் காரணம் இன்றி கிடப்பில் போடப்பட்டு வருவது காலம் காலமாக நடப்பதுதானே.

எனக்குத் தெரிந்த தமிழறிஞர் ஒருவர், அரசிடமும், பல்கலைக்கழகத்திடமும் பலதடவை இதுபற்றி கேட்டுப் பார்த்துவிட்டார். ம்ஹூம்… அச்சு உரிமையை மற்றவர்களுக்கு தரவும் மறுக்கிறார்கள்.

பல ஆண்டுகள் பதிப்பில் இல்லாதிருந்த கோவை கம்பன் கழக கம்பராமாயணம் பதிப்புரிமையை எப்படி என்.சி.பி.எச் பெற்று, இன்றைக்கு எவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய படைப்பாக்கியுள்ளதோ, அதுபோன்று இவற்றுக்கும் ஒரு காலம் வரும் என்று நம்ப வேண்டியதுதான்.

அதேநேரம், என்றைக்கு படைப்புகள் சார்ந்த பதவியும், அதிகாரமும் படைப்பாளிகளிடம்; அதன் முக்கியத்துவம் தெரிந்தவர்களிடம் வருகிறதோ, அதுவரைக்கும் இதுபோன்ற இழிநிலைகளை எல்லாம் கண்டு சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 299

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=