சொல்லன்றி எதுவுமற்றவன்! – 299
எனினும் சென்னைப் பல்கலைக்கழகம் சென்ற நூற்றாண்டில் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் பேரகராதி, அச்சுத்தொழில்நுட்பம் வளர்ந்திட்ட இந்நூற்றாண்டிலும் மறுஅச்சு வராமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதே?
ஆமாம். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இதுகுறித்து பல தடவை எழுதி இருக்கிறார். நானும் கூட எழுதி இருக்கிறேன். சில தமிழ் அறிஞர்கள் தொடர்ந்து அரசிடமும், பல்கலைக்கழகத்திடமும் வலியுறுத்தி வருகிறார்கள். என்றபோதும் அது சாத்தியப்படவில்லை.
காரணம் ஒன்றுதான். அதன் முக்கியத்துவம் தெரிந்த தகுதியான நபர்களிடம் அதற்கான அதிகாரம் இல்லாமல் போனதுதான். எது எதற்கோ கோடிகோடியாய் நிதி ஒதுக்கி வீணடிக்கிறார்கள். அவற்றில் சிறிதை இதுபோன்ற முக்கியப் படைப்புகளுக்கு ஒதுக்கி மறுஅச்சு கொண்டு வரலாம்.
[இன்னும்]
*