சொல்லின்றி எதுவுமற்றவன்! – 212

ஓர் இளம் எழுத்தாளராக உங்களுக்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு உதவுகிறது?

பலவகையில் என்றுதான் சொல்வேன்.

முதலில் என் படைப்புகளை யார் உதவியும் இல்லாமல் சுயமாக வெளியிடவும், ‘ஐயா’ முதல் இந்நேர்காணல் வரை பலநூறு பேர்களிடம் எளிதில் கொண்டுபோய் சேர்க்கவும் பெரிதும் உதவுகிறது.

இத்தொழில்நுட்பம் அதிலும் குறிப்பாக முகநூல் மட்டும் இல்லாமல் போயிருந்தால், இவ்வளவு குறுகிய காலத்தில் என் நூல்கள் யாரென்றே தெரியாத எத்தனையோ முகம் தெரியாத வாசகர்களை சென்று சேர்ந்திருக்காது.

தொழில்நுட்பம் இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. அதை என்போன்ற இளம் எழுத்தாளர்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலேறி வருவது காலத்தின் அவசியம். அதை முடிந்தவரை சரியாக செய்துவருகிறேன் என்றே நினைக்கிறேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 211

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=