சொல்லின்றி எதுவுமற்றவன்! – 211

அதென்ன புத்திசாலிகளாக நினைத்து, புரியவில்லையே?

(எனது கேள்வியால் சற்று எரிச்சலானவர், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சட்டென்று முகத்தைத் திருப்பி வேடிக்கை பார்ப்பதுபோல் சிலநொடிகள் அருகில் மேய்ந்துகொண்டிருந்த பசுமாட்டை பார்த்துவிட்டு, வராதப் புன்னகையை வரவழைத்துக் காட்டிவிட்டு)

நாம் ஒன்றை உருவாக்கும்போது அதை வாங்குபவர்களை மனத்தில் நிறுத்தி, நமக்கு நிகராக அல்லது நம்மைவிட ஒருபடி மேலானவர்களாக எண்ணி உருவாக்கவேண்டும். அது பொருளாக இருந்தாலும் சரி, பத்திரிகையாக இருந்தாலும் சரி.

அதை விட்டுவிட்டு, ‘அவனுங்க கிடக்குறாங்க, முட்டாளுங்க. அவுங்களுக்கு ஒண்ணும் தெரியாது. நமக்குதான் எல்லாம் தெரியும். அதனால நாம என்ன தந்தாலும் வாய மூடிக்கிட்டு வாங்கிப் படிப்பாங்க’ என்று நினைத்தால், ஒருதடவை இரண்டுதடவை பார்ப்பார்கள். அதற்குமேல் அதில் பெற ஒன்றுமே இல்லை என்று தோன்றிவிட்டால், தூக்கிப் போட்டுவிட்டு தமக்கானதைத் தேடிப் போய்விடுவார்கள். அதுதான் இன்றைக்கு பத்திரிகைகள் விஷயத்தில் நடந்துள்ளது.

(இன்னும் எதையோ சொல்ல வந்தவர், சில நொடிகள் தனக்குள் யோசித்துவிட்டு)

சந்தேகம் இருந்தால் நீங்களே இதனை, ஓர் இதழை தொடர்ந்து வாங்கி வாசித்து வந்தவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நான் சொன்னதையேதான் வேறுவேறு வார்த்தைகளில் சொல்வார்கள்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 210

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=