சொல்லின்றி எதுவுமற்றவன்! – 210
நிச்சயம் செய்து முடிப்பீர்கள், வாழ்த்துகள். மீண்டும் பத்திரிகைக்கு வருவோம். ஏன், பத்திரிகைகள் இந்த அளவுக்கு வீழ்ச்சியை அடைந்துள்ளது?
தரம் இல்லாமைதான் காரணம். கேட்டால் தொழில்நுட்ப வளர்ச்சியால் யாரும் இதழ்கள் வாங்குவதில்லை என்பார்கள். உண்மை அது கிடையாது. தரம் இல்லாததைப் போய் யார் காசுகொடுத்து வாங்குவார்கள்?
அப்படியே அவர்கள் சொல்வது போல தொழில்நுட்பம் காரணமாக இருந்திருந்தால், ஆன்லைனில் பத்திரிகைகளின் விற்பனை அதிகமாகி இருக்கவேண்டுமே, ஏன் ஆகவில்லை?
எந்த ஒன்றையும் மிகத் தரமாக, அதை வாங்குபவர்களை பெரும் புத்திசாலிகளாக நினைத்து உருவாக்கினால், அது நிச்சயம் சென்று சேரும். இல்லையென்றால் இப்படித்தான் வீழ்ச்சியடையும்.
[இன்னும்]
*