சொல்லின்றி எதுவுமற்றவன்! – 204
நீங்கள் இப்போது ‘ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது’க்கு தேர்வாகக் காரணமான ‘முரம்பு கிராமியச் சொல்லகராதி’ பற்றி சொல்லுங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் தென்புறத்து கிராமமான திருவடத்தனூரின் மேட்டுப்பகுதியான ‘முரம்பு’ என்னும் பட்டப்பெயர் கொண்ட இடத்தில், வாழ்ந்த; வாழ்கிற; வாழப்போகிற மக்கள் பேசிய; பேசுகிற; பேசப் போகிற வார்த்தைகளை மட்டும் கொண்டு உருவாக்கிவரும் தனித்துவமான அகராதி இது.
சொல்லப்போனால் உலகின் முதல் கிராமியச் சொல்லகராதி. இந்த அகராதி மூலமாக பலநூறு சொற்கள் தமிழுக்குக் கிடைக்கப் போகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பணி இது என்பதால்தான், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ‘ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது’க்காக இப்பணிக்கு என்னை தேர்வு செய்திருக்கிறது.
[இன்னும்]
*