சொல்லின்றி எதுவுமற்றவன்! – 203
ஒருபக்கம் வருத்தமாகவும், இன்னொரு பக்கம் பெருமையாகவும் உள்ளது. எப்படி இந்த வயதுக்குள் இப்பக்குவத்தை அடைந்தீர்கள்?
(சத்தமின்றி மிகச் சின்னதாய் சிரித்தவர்) காலம்தான் என்னை ஒவ்வொரு நாளும் தீட்டி வருகிறது. ஆரம்பத்தில் நான் செய்த செயலுக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கியிருக்கிறேன். அது கிடைக்காமல் தகுதியற்றவர்களை போய் சேரும்போது வருந்தி இருக்கிறேன். பிறகுதான் அவற்றின் பின்னால் உள்ள அரசியல் புரிய ஆரம்பித்தது. அதன்பின் ‘செயல்தான் நமக்கான மகிழ்ச்சி; அந்த மகிழ்ச்சிதான் உண்மையான அங்கீகாரம்’ என்பதை புரிந்துகொண்டேன்.
இப்போதெல்லாம் எந்த அங்கீகாரத்துக்காகவும் ஏங்குவதில்லை; காத்திருப்பதும் இல்லை. என் பணி செய்தல், அவ்வளவுதான். இந்த பக்குவம் மட்டும் அடையாமல் போயிருந்தால், இங்குள்ள அரசியல் என்னை தொடர்ந்து வீச்சுடன் இயங்கவிட்டிருக்காது. நல்லவேளை, காலத்துக்கு நன்றி!
[இன்னும்]
*