சொல்லின்றி எதுவுமற்றவன்! – 201

என்ன சொல்கிறீர்கள், ஒரு வரிகூட இதுபற்றி எழுதப்படவில்லையா?

(வேகமாக தலையாட்டி ‘ஆமாம்’ என்றவர்)

இந்த அவலமும், பாரபட்சமும் தமிழிலும், தமிழ்நாட்டிலும் மட்டும்தான் நடக்கும். இதுவே வேற்று மொழியில் போய் தேடிப் பாருங்கள். அந்தந்த மொழிகளில் தேர்வானவர்களை கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். இங்கோ யாருக்கும் மனம் இல்லை.

இத்தனைக்கும் நான் இதுகுறித்து அறிவிப்பு வெளியானதும் முகநூலில் இட்ட பதிவை என் நட்பு வட்டத்தில் இருக்கும் எல்லா ஊடகவியலாளர்களும்; பத்திரிகையாளர்களும் பார்த்தார்கள். சிலர் வேறு வழியின்றி என்னிடம் கடமைக்கு வாழ்த்து சொன்னார்கள். இன்னும் பலரோ வாய் கூட திறக்கவில்லை.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்ய நினைக்கிறேன். இவர்களின் அங்கீகாரத்தையும், வாழ்த்தையும் எதிர்பார்த்து நான் இங்கே எழுத வரவில்லை. எப்படியானலும் என் பணி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். எவ்வளவு புறக்கணிப்புகள் வந்தாலும் சரி, கடுகளவும் பாதிக்காது. மாறாக அவை என்னை இன்னும் இன்னும் பெருஞ்செயல்கள் செய்ய தூண்டிக்கொண்டுதான் இருக்கும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 200

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=