சொல்லின்றி எதுவுமற்றவன்! – 200
ஒரு பத்திரிகையாளராக இருந்த நீங்கள், சக பத்திரிகையாளர்களை இப்படி குற்றம் சொல்லலாமா?
ஹாஹா… (சிரிக்கிறார்)
என்ன சொன்னீர்கள்? சக பத்திரிகையாளர்கள். (இம்முறை சத்தமின்றி தலையாட்டியபடி இதழை மட்டும் மிதமாக அசைத்து சிரித்துவிட்டு)
பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டார்கள் என்பதற்கு ஓர் அண்மைய உதாரணம் சொல்கிறேன். கேளுங்கள்.
நான் தற்போது உருவாக்கி வரும் ‘முரம்பு கிராமியச் சொல்லகராதி’க்காக மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் வழங்கும் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான ‘ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது’க்கு தேர்வாகி இருக்கிறேன். இலக்கியப் பிரிவில் இந்த விருதுக்கு தேர்வான முதல் தமிழ் இளம் எழுத்தாளர் நான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டு இன்றோடு சரியாக ஒரு மாதம் ஆகிறது. இன்றுவரை எந்தத் தமிழ் ஊடகத்திலும், பத்திரிகையிலும் ஒரு வரி கூட; ஒருநொடி கூட செய்தியாக வரவில்லை. எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. நமது மொழிக்கும், நம் மொழியில் இயங்கும் ஒரு படைப்பாளிக்கும் கிடைத்த எத்தனை உயரிய அங்கீகாரம் இது. இதை எழுத ஓர் ஊடகமும் முன்வரவில்லை, ஒரு பத்திரிகையாளருக்கும் மனம் வரவில்லை.
ஒரே காரணம் ‘வடிவரசு’ என்னும் எனது பெயர்தான். ஏனென்றால், ஒரு காலத்தில் அவர்களில் ஒருவனாக பத்திரிகையில் வேலை பார்த்தவன். சக பத்திரிகையாளர். ‘இவனைப் பற்றியா எழுதுவது?’ என்னும் குறுகிய மனப்பான்மைதான். இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லமுடியும்.
[இன்னும்]
*