சொல்லின்றி எதுவுமற்றவன்! – 199

தகுதியற்ற பத்திரிகையாளர்கள்தான் இதற்குக் காரணம் என்கிறீர்களா?

இதில் என்ன சந்தேகம்?

திறமையாளர்களை தேடித்தேடி வாய்ப்பு தந்து எழுத வைத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் காலவெள்ளத்தில் இல்லாமல் போய்விட்டார்கள். இன்றைக்கு தரப்படும் வாய்ப்புகள் தெரிந்தவர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும், அவரால் இன்னின்ன காரியம் ஆகும் எனக் கருதப்படுபவர்களுக்குமே தரப்படுகின்றன.

இதை இப்படி சொல்லலாம். எல்லாம் ஒருவகை கொடுத்தல் வாங்கலாக மாறிவிட்டது. இத்தகைய இடத்தில் தரமான படைப்புகள் எப்படி உருவாகும், வெளியாகும்?

இன்னொரு முக்கியமான விஷயம். இதழாளர்களை மட்டும் இங்கே முழுதும் குறை சொல்ல முடியாது. இதழ்களில் எழுதும் படைப்பாளிகளும் அதன் முக்கியத்துவம் கருதாமல் கண்டதை எழுதி வீணடிக்கிறார்கள். இருபக்கமும் தவறுகள் இருந்தாலும், பத்திரிகைகள் செய்யும் தவறு ஒருபோதும் மன்னிக்க முடியாதது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 198

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=