சொல்லின்றி எதுவுமற்றவன்! – 198

நீங்கள் பத்திரிகையில் பணிபுரிந்தவர் என்பதால் இந்தக் கேள்வி. முன்பெல்லாம் வாசகர்கள் இதழ்களில் வரும் தொடருக்காக வாரக்கணக்கில் ஏன், மாதக்கணக்கில் கூட காத்திருந்து வாசித்ததாக சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏன், இப்போதெல்லாம் யாரும் அவ்வாறு வாசிப்பதில்லை?

இதற்கான பதில் சொல்லித்தான் தெரிய வேண்டுமா, என்ன? இன்றைக்கு வரக்கூடிய இதழ்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தாலே தெரியும். எந்த அளவுக்கு மெனக்கிடல் இல்லாமல் அதுவும், கடமைக்கு பக்கங்களை நிரப்பி வைத்திருக்கிறார்கள் என்பது.

ஆனால், முன்பு அப்படி கிடையாது. ஒவ்வொரு வரியும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. அதனால் உயிரை உருக்கி வேலை செய்தார்கள். இன்றைக்கோ இதழ் என ஒன்று வந்தால் போதும் என நினைக்கிறார்கள். அனுபவம் வாழ்ந்தவர்கள் யார் என விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் வேலையே தெரியாத புதியவர்கள்.

அதேநேரம், இதழ்களில் எழுதக்கூடிய எழுத்தாளர்களும் சரிவர மெனக்கிடுவதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். யார் யாரையோ பிடித்து, எப்படி எப்படியோ தொடர் எழுதும் வாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அதை சரியாகப் பயன்படுத்துவது கிடையாது. அதனால்தான் வாசிப்பவர்கள் யாரும் அதனை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 197

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=