சொல்லின்றி எதுவுமற்றவன்! – 182

அருமை, வாழ்த்துகள். கிட்டத்தட்ட இந்நெடிய நேர்காணல் ஆரம்பித்து ஆறு மாதம் முடிந்து, ஏழாவது மாதம் தொடங்கிவிட்டது. இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது, அதற்குள் ஆறு மாதம். சரி, கேள்விக்கு வருவோம். நாவலின் சில இடங்களில் மட்டுமே வந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இன்னொரு பாத்திரம் சோலைக்கண்ணன். அவர் பேசுவது கெட்டவார்த்தைகள் என்றாலும், அது வாசிக்கையில் முகசுளிப்பை ஏற்படுத்தாதபடி வடிவமைத்திருப்பீர்கள். இதை எவ்வாறு கைகொண்டீர்கள்?

(சத்தமாகச் சிரிக்கிறார்)

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. அப்படி செய்தால் அது நல்ல படைப்பாக இருக்காது என்பது என் எண்ணம். அவ்வகையில் இந்நாவலும், இதில் வரும் பாத்திரங்களும் நான் பிறந்து வளர்ந்த முரம்பு மண்ணிலிருந்து எனது வழியாக உதித்து உயிர்த்து வந்தவை. ஒரு படைப்பாளியாக என் படைப்புகளுக்கு நான் எப்போதும் உண்மையாக இருப்பவன். அவ்வளவுதான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 181

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=