சொல்லின்றி எதுவுமற்றவன்! – 183
வாசித்து முடித்ததும் ‘நாமும் ஒரு பயணம் போயிட்டு வந்தா என்ன?’ என்று தோன்றும் வகையிலான நூல் உங்களது அடுத்த நூலான ‘திருவாளர் ஊர்சுற்றி’. முகப்பு அட்டை தொடங்கி உள்ளடக்கம் வரை பலப் புதுமைகள் கொண்டது. இந்நூல் உருவான விதம் பற்றி சொல்லுங்கள்.

மிகச் சிறு வயதாக இருக்கும்போது பக்கத்துத் தெரு, பக்கத்து ஊர், அருகில் இருக்கும் இடங்கள் என்று ஆரம்பித்த பயணம், இன்று பல மாநிலங்கள் கடந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தூரம் பயணிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. திரும்பிப் பார்த்தால், எனது இதுநாளைய வாழ்வில் தொடர்ப் பயணியாகத்தான் எப்போதும் இருந்துவந்திருக்கிறேன். அதனால் என்னை அடிக்கடி ‘திருவாளர் ஊர்சுற்றி’ என சொல்லிக் கொள்வதுண்டு.
அவ்வாறு நான் பயணித்தவற்றில் இருந்து ஒரு பயண நூல் எழுதலாம் என்று ஓர் அதிகாலையில் தோன்ற, உடனே எழுந்து எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்படித்தான் இந்நூல் உருவானது.
[இன்னும்]
*