சொல்லின்றி எதுவுமற்றவன்! – 179
எனினும் இன்னொரு பக்கம் சில படைப்பாளிகளின் படைப்புகளில் தாவரங்கள் தேடினாலும் இருப்பதில்லையே?
ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையிடம் போய் காகிதத்தையும் பென்சிலையும் தந்து எதையாவது வரையச் சொன்னால், நிச்சயம் அது வரைந்தவற்றுடன் ஒரு மலையையும் மரத்தையும் சேர்த்து வரையும். இயல்பிலேயே மனிதர்கள் இயற்கையுடன் அதிலும் குறிப்பாக, தாவரங்களுடன் கொண்ட உறவின் நீட்சியாக இதைப் பார்க்கலாம்.
இன்னொரு பக்கம் தாவரங்களுடன் வாழாத, தாவரங்கள் பற்றிய அறிமுகமே இல்லாத ஒரு தலைமுறையும் இங்கே உருவாகி நிற்கிறது. அவர்களிடம் போய் ‘இது என்ன மரம்?’ என்று எந்த மரத்தைக் காட்டிக் கேட்டாலும், ‘Tree’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வராது. அப்படிப்பட்ட படைப்பாளிகளின் படைப்பில் எப்படி தாவரங்கள் இருக்கும், தாவரம் சார்ந்த வாழ்க்கை இருக்கும்?
[இன்னும்]
*