சொல்லின்றி எதுவுமற்றவன்! – 169
தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டு எழுதினீர்களா? இல்லை, எழுதிவிட்டு தலைப்பு வைத்தீர்களா? நாவலுக்கு அத்தனைப் பொருத்தமாக இருப்பதால் கேட்கிறேன்.
(சிரிக்கிறார்)
வாசித்த உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?
(நான் சொன்னேன், ‘தலைப்பு தேர்வு செய்துவிட்டு எழுதியதாக’)
ஆமாம். என் படைப்பை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். இப்படி ஒரு நாவல் எழுதப்போகும் தகவலை நான்காண்டுகளுக்கு முன்னால் ‘முரம்பு’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றிலும், ‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ நூலிலும் பதிவு செய்திருப்பேன்.
(சிறிது இடைநிறுத்தியவர்)
இன்னொரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இந்நாவலே ‘முரம்பு’ என்னும் மண்ணைப் பற்றியது. அம்மண்ணில் உருவான ஓர் ஊரைப் பற்றியது. அங்கே வாழும் மக்களைப் பற்றியது. அவர்தம் வாழ்வைப் பற்றியது என்பதால், இந்தத் தலைப்பை தவிர்த்துவிட்டு வேறு எத்தலைப்பு வைத்திருந்தாலும் இத்தனைப் பொருத்தமாக இருந்திருக்காது.
[இன்னும்]
*