சொல்லின்றி எதுவுமற்றவன்! – 164
‘நேரம் இருந்திருந்தால் இன்னும் சிலவற்றையும் செய்திருக்கமுடியும்’ என்றீர்கள். அப்படி என்ன செய்திருப்பீர்கள்?
இயற்கை மீது அதிலும் குறிப்பாக, தாவரங்கள் மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட நாங்கள், திருமணம் முடிந்ததும் நேராக அடையாறு ஆலமரம் போன்ற பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த மூத்த மரத்திடம் சென்று ஆசி பெற்று, அதனடியில் சிறு உரையாடல் நிகழ்வு வைத்திருப்போம். அதில் கலந்துகொண்டவர்களுக்கு வேம்பு, வாழை, பனை முதலான செடிகளும், கன்றுகளும், விதைகளும் வழங்கியிருப்போம்.
கூடவே, நான் படித்த லயோலோ கல்லூரியில் முன்கூட்டியே அனுமதி பெற்று, கையோடு சென்று சில மரக்கன்றுகளும் நட்டிருப்போம்.
[இன்னும்]
*