சொல்லின்றி எதுவுமற்றவன்! – 160
நீங்கள் எந்த அளவுக்கு திருவள்ளுவர் மேல் மதிப்பு வைத்துள்ளீர்கள் என்று புரிகிறது. அகரத்தாலியை தேர்வு செய்யவும் அவர்தான் காரணமா? இல்லை, தமிழ் மொழி மீது கொண்ட பற்றா?
(சத்தமாக சிரிக்கிறார்)
உண்மையான காரணம் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற வள்ளுவப் பாட்டனின் கூற்றுதான்.
அதேநேரம், தமிழ் மொழி மீது பற்று இல்லாமலும் இல்லை. அது உண்டு என்றாலும், ஒருபோதும் வெறியானது கிடையாது. அதனால், உலகத்தின் எல்லா மொழிகளையும் சிறந்த மொழிகளாகவே பார்க்கிறேன். அனைத்தையும் மதிப்பது போல தமிழ் மொழியையும் மதிக்கிறேன். என்ன, எனது தாய்மொழி என்பதால் தமிழ் மேல் சற்று கூடுதலாக அன்பு வைத்திருக்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்.
[இன்னும்]
*