உத்தி

விளையாட்டுத்துணை.

[சிறுவர்கள் விளையாட்டின்போது இருவர் இருவராகப் பிரிந்து போய், ஆளுக்கொரு பெயர் வைத்துக்கொண்டு வந்து அணித்தலைவர்களிடம் ‘உத்தி உத்தி யார் கேட்க?’ எனக் கேட்டு, தாம் வைத்து வந்து பெயர்களைச் சொல்லி (யாருக்கு அதில் எப்பெயர் எனச் சொல்லாமல் மாற்றியும், சில சமயம் மாற்றாமலும்), அதில் யார் வேண்டும் எனக் கேட்டு, அதன்படி இருவரும் இரு அணிக்கு பிரிந்து செல்வது வழக்கம். இவ்வாறு விளையாட்டுக்கு அணி பிரிக்கும் முறையினை ‘உத்தி’ என்றும், ‘உத்தி போடுதல்’  என்றும், ‘உத்தி பிரித்தல்’ என்றும் சொல்வர்.]

[உத்தி = உத்தி போடுதல் = உத்தி பிரித்தல்]

– யாருலாம் கபடியாட வர்றீங்களோ போயி உத்தி போட்டுனு வாங்க.

– உத்தி போட யாருக்கு ஆளு இல்லயோ, அவன் பொது ஆளு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=