சொல்லின்றி எதுவுமற்றவன்! – 046

கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்கவந்து இங்கேயே இருந்துவிட்டவர் நீங்கள். இப்படியிருக்க சென்னையின் பெருமை சொல்லும் விதமாகஉங்கள் சென்னை’ பாடல் எழுதியது ஏன் என தெரிந்துகொள்ளலாமா?

என் நண்பர்களில் பலர் சென்னையை வெறுப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். எனினும் எனக்கு ஒருபோதும் அப்படி தோன்றியது கிடையாது. மாறாக நான் சென்னைக்கு வந்த 2009 முதலே நேசிக்க ஆரம்பித்தேன். இங்கிருக்கும் பலதரப்பட்ட மக்கள், அவர்களது கலவையான வாழ்க்கைமுறை, தினம் தினம் புதிதுபுதிதாக கற்றுத்தரும் பாடங்கள் என ஒவ்வொன்றுமே எனக்கு அன்று தொடங்கி இன்று வரையில் மனத்துக்குப் பிடித்ததாகத்தான் இருந்துவருகின்றன. அதனால் வாய்க்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் சென்னை பற்றி பெருமையாகவே கூறி வந்திருக்கிறேன். அதேநேரம் சென்னைக்கு குறைகளே இல்லை என்றும் சொல்லமாட்டேன்.  

ஒருநாள் தற்செயலாக வடபழனியில் இருந்த எனது நண்பரின் ஒலிப்பதிவு கூடத்திற்குப் போயிருந்தேன். அப்போது அங்கே வந்திருந்த தனது கல்லூரி சீனியரான ஒளிப்பதிவாளர் மார்ட்டின் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, அவரோடு சேர்ந்து சென்னை பற்றி ஒரு பாடல் உருவாக்கி வெளியிடலாம் என்றார். ‘சரி’ என்றேன்.

ஓர் இசைக்கோப்பை ஒலிக்கவிட்டு, இதை மனத்தில் நிறுத்தி எழுதுங்கள் என்றார். அதைக் கேட்டுவிட்டு அறைக்கு வந்து அடுத்தநாள் காலையில் எழுந்து,

எப்போதோ பிறந்து

இப்போதும் வளர்ந்து

வந்தாரை வாழவைக்கும்

உங்கள் சென்னை…

நான் செந்தமிழ் தேசத்தின்

தலை அன்னை…’

என்ற தொடக்க வரிகளை எழுதினேன்.

எழுதுவதற்கு முன்பாகவே… இதுவரையான சென்னை பாடல்கள் போல இல்லாமல் முற்றிலும் வேறுவிதமாக அதாவது, கூறுமுறையில் சென்னை ஓர் அன்னையாக, அவள் தன் பிள்ளைகளான இங்கிருக்கும் மக்களைப் பார்த்து பாடுவதாய் எழுதவேண்டும் என முடிவுசெய்து எழுதினேன். அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது.

இதுவரை வந்திருக்கும் சென்னை பாடல்களிலேயே இது தனித்துவமாக இருப்பதை இப்போதும் நீங்கள் பார்க்கலாம்; கேட்கலாம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 045

https://www.youtube.com/watch?v=Xd5Dfh90-fE&list=PLGUKnjwlHT3BFSsdSwv4_-21oTU5x2b2F&index=7
உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=