சுக்கங்காய்

விளைநிலங்களில் (படர்ந்திருக்கும் கொடிகளில்) காய்க்கும் சிறு காய்.
[பார்க்க மிகச்சிறிய தர்பூசணி போன்று இருக்கக்கூடியது. (பழுத்ததும்) மனிதர்கள் மட்டுமின்றி… ஆடு, மாடு, பறவை என யாவும் விரும்பி உண்ணக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்தது. வேர்க்கடலை, கம்பு, சோளம், எள் போன்றவற்றின் நடுவில் தானாக முளைத்து படர்ந்து வளரக்கூடியது.]
[சுக்கங்காய் = சுக்கங்கா = சுக்குங்கா]
– ரங்கமூட்டு கம்மங் கொல்லில… இந்த வருசம் கம்பவுட சுக்கங்கா தான் அதிகமா காச்சிகீது.
– ஏன் எக்கா… வுட்டா ஒன் மவன் நாளுபூரா சுக்கங்கா பறிச்சி தின்னுனே இருப்பான், போல…?
*