சீந்தல்கொடி

கிளைகளிலிருந்து நீள நீளமாக நூல் போன்று தொங்கும் கொடி வகை.
[இக்கொடியை எடுத்து வந்து மரக்கிளை மீதோ, செடிகொடிகள் மீதோ போட்டுவிட்டால் போதும், வேரின்றி தானாகத் துளிர்த்து வளரும் சிறப்புடையது. இதன் இலையைப் பறித்து எண்ணெயில் வாட்டி குழந்தையின் தலைமேல் வைத்தால் போதும் சளியை எடுத்துவிடும். கொடியை பறித்துவைத்து மோதிரம், காப்பு, கை கடிகாரம் போன்றவை செய்து சிறுவர்கள் விளையாடுவர்.]
[சீந்தல்கொடி = சீந்தக்கொடி = சீந்திகொடி = சீந்தல் = சீந்தல்லு]
– ஏழு கழுத வயசாவுது, இன்னும் சின்னப் புள்ளமாரி சீந்திகொடி பறிச்சாந்து மோதரம் செஞ்சி வெளாடினுகீறான்.
– சோமாசம் பாற பக்கம் போனின்னா… சீந்தல்லு எல ரவ பறிச்சினு வா, புள்ள சளிக்கு போடறதுக்கு.
*