ஆக்கருவாள்

மெல்லிய நீளமானக் கழியின் நுனியில் மாட்டி (மரத்தின் கீழிருந்து) உயரமானக் கிளைகளை வெட்டவும், கொடிகளை அறுத்து இழுக்கவும் ஏதுவாக நன்கு வளைந்திருக்கும் அருவாள் வகை.

[ஆக்கருவாள் = ஆக்கருவா = ஆக்கர்வா]

– ஆக்கருவாள எடுத்துனு போயி… ஆட்டுக்குட்டிக்கி ரவ கொடிக்களிக்கா தழ வெட்டியாந்து போடு.

– கெளயில தொங்கற முஷ்டக் கொடிய மாட்டி இசுக்க ஆக்கருவாதான் செரியா வரும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=