ஓதல்

ஓதுதல்.
[இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் மாலைநேர இறைவழிபாட்டுக் கூட்டம் முடித்துவிட்டு வெளியில் வரும்போது உடல்நலம் சரியில்லாத குழந்தைகளை (குறிப்பாக காய்ச்சல்) கூட்டிப்போய் அவர்களிடம் காட்டினால் மந்திரம் ஓதி முகத்தில் ஊதுவார்கள். அதோடு, வீட்டிலிருந்து சிறு சொம்பில் எடுத்துப்போகும் தண்ணீரிலும் ஓதி ஊதி அனுப்புவார்கள் (அதைக் கொண்டுவந்து மூன்றுவேளை வைத்திருந்து பருகவேண்டும்; முகம், கை, கால்களில் தடவவேண்டும்). அதனால் உடனே குணமாகிவிடும் என்பது நம்பிக்கை.]
[ஓதல் = ஊதல்]
– அல்லாக்கோயில்ல அஜ்ஜான் கூவறாங்க பாரு… ஏன்ச்சி புள்ளய தூக்கினுபோயி ஓதினு வா, தாயி.
– காதர்பாய் ஓதனாருன்னு வைய்யி, எப்பேருபட்ட ஜொரமா இருந்தாலும் ஒடனே போயிடும்பாங்க.
*