நீசத்தண்ணி

பழஞ்சோற்றில் கலந்த நீர் (நீராகாரம்).

[அதாவது, இரவு மீதமாகும் சோற்றில் ஊற்றிவைத்து காலையில் உப்பிட்டுக் குடிக்கும் நீர் (நீராகாரம்). இரவுமுழுக்க சோற்றில் நன்கு ஊறி, வெண் நிறத்தில் இருக்கும் இத்தண்ணீர் கூடுதல் சுவையானது, சத்தானது என்பர்.]

[நீசத்தண்ணி = நீசதண்ணி= நீஸ்தண்ணி]

– காலில வெறும் வவுத்துல நீசத்தண்ணி குடிச்சிட்டுப் போன மனுசன்… எங்கப் போயி தொலஞ்சானோ, தெர்ல.

– தெனம் காலில ஏன்ச்சதும் உப்புப்போட்டு நீசதண்ணி குடிச்சாலே போரும், ஒடம்பு சொம்மா கின்னுனு இருக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=