கோடி

ஏரி நிரைந்து தண்ணீர் வழிந்து வெளியேறல் மற்றும் இறந்தவரின் உடல்மீது போத்தும் அல்லது உடுத்தும் இறுதி ஆடை (துணி).

[முன்னதை ‘கோடிபோதல்’ என்றும், பின்னதை ‘கோடித்துணி’ என்றும் சொல்வதுண்டு. அதிலும் (கோடித்துணியைப் பொருத்தவரையில்) இறந்தவர் ஆண் எனில் தம் வீட்டிலிருந்தும், பெண் எனில் தாய் வீட்டிலிருந்தும் எடுத்துவருவது வழக்கம்.]

[கோடி = கோடிபோதல் = கோடித்துணி]

– பத்து வருசத்துக்கப்பறம் இப்பதான் நம்மூரு ஏரி ரம்பி கோடி போறதப் பாக்கறன்.

– எங்குளுக்குள்ள எம்மாம் சண்டசாடி இருந்தாலும்… நான் செத்தா அவனும், அவன் செத்தா நானும்தான் கோடிதுணி எடுத்தாந்து போடுவோம், பாத்துக்க.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=