மழை வான் மறப்ப

ஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு ஒளிவுமறைவின்றி உரைக்கிறாள்.

*

மழை வான் மறப்ப –

மரம் மண் மறப்ப –

தேன் வண்டு மறப்ப –

பண் யாழ் மறப்ப..

அலை கடல் மறப்ப –

நீர் மீன் மறப்ப –

வேர் மலர் மறப்ப –

சேய் தாய் மறப்ப..

*

எல்லாம் இங்கு மறப்ப –

உன்னை யான் நினைப்ப –

என்னை நான் மறப்ப.. ஆ…

மழை வான் மறப்ப –

மரம் மண் மறப்ப –

தேன் வண்டு மறப்ப –

பண் யாழ் மறப்ப..

*

குரல் : ரம்யா மேனன்                   

ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

”பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=