மோர் சொம்பு

(அடியிலிருந்து) முக்கால் பாகம் பெருத்தும், நுனியில் மட்டும் சிறுத்தும் இருக்கும் ஒருவகை சொம்பு.
[அதிகமும் மோர் ஊற்றி வைக்கப் பயன்படுவதால் இப்பெயர் வந்ததாக சொல்வர்.]
[மோர் சொம்பு]
– ஏன் தாயி, அந்த மோர் சொம்ப எடுத்துனு போயி செத்த பால் வாங்கியாந்தா கொறஞ்சியா போய்டுவா…?
– தெனம் காலில மோரு சொம்புல ஒரு சொம்பு நீசத்தண்ணி குடிச்சாதான் ஒடம்புக்கு தெம்பாருக்கும்.
*