முரம்பு படைப்பகம்

நண்பர்களோடு சேர்ந்து கடந்த ஜனவரி 2020-ல் தொடங்கப்பட்டது முரம்பு படைப்பகம். அதன் முதல் நூலாக எனது ‘ஏலேலோ பாட்டு’ வெளியானது யாவரும் அறிந்ததே.
முரம்பு படைப்பகத்தின் லோகோவையும் அதன் முதல் நூலையும் வடிவமைத்த என் மதிப்பிற்குரிய வடிவமைப்பாளர் பிரபு சார் இப்போது நம்மிடையே இல்லை. கடந்தாண்டு மே மாதம் கொரோனோ நோய்த்தொற்று காரணமாக மறைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் பகிர்கிறேன். அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாதது என்பது அவருடன் பழகியவர்களும், அவரோடு வேலை பார்த்தவர்களும் நன்கறிவர். அதிலும் அவர் விகடனில் வேலைபார்த்தபோது வடிவமைத்த பலநூறு அட்டைப்படங்களும், கட்டுரைகளும் காலத்துக்கும் பேசக்கூடியவை.
தமிழில் முதன்முதலில் ஒரு நூல் முழுக்க (ஏலேலோ பாட்டு) க்யூ.ஆர்.கோடு (QR Code) கொண்டு உருவாக்கிய பெருமை அவரையும், எங்கள் முரம்பு படைப்பகத்தையும் என்றுமே சேரும்.

அந்நூலைத் தொடர்ந்து எனது நிலைத்திணை, ஐயன்Sol_தனயன்Click, எங்க கல்யாணம் போன்ற நூல்களும், தற்போது முரம்பு நாவலும் முரம்பு படைப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. அனைத்தையும் அழகுற வடிவமைத்தவர் என் அன்புக்குரிய சக்திவேல் சார்.
நண்பர்களின் உதவியோடு ஆரம்பித்து ஒவ்வொரு நூலையும் அவ்வளவு மெனக்கிடலோடு உருவாக்கி வெளியிட்டு வருகிறோம். முதலில் என் நூல்கள் மட்டுமே வெளிவந்தாலும் பின்னாளில் பிறரது நூல்களையும், அதிலும் குறிப்பாக அச்சில் இல்லாத மிக அரிய நூல்களைத் தேடிக் கண்டெடுத்து மீண்டும் அச்சுக்கு கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறோம்.
தொடர்ந்து நண்பர்களோடு சேர்ந்து யாவரும் ஒத்துழைப்பு நல்கிட முரம்பு படைப்பகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
~
தொடர்புக்கு :
முரம்பு படைப்பகம்,
195, மாரியம்மன் கோயில் தெரு,
திருவடத்தனூர் ( கிராமம் & தபால்),
தண்டராம்பட்டு (வட்டம்),
திருவண்ணாமலை (மாவட்டம்) – 606 708.
9715383822, murambupadaippagam@gmail.com
சென்னை முகவரி : 3 / 2 (F2),
டாக்டர் சாலமன் தெரு,
ஜமின் பல்லாவரம், சென்னை – 43
*
