பொனக்கட்டை

மூங்கில் குழாயில் செய்த ஒருவகைப் பாத்திரம்.
[ஆடு, மாடு மேய்க்கப் போகும்போது உணவு எடுத்துச் செல்லவும், உணவுப்பொருட்கள் போட்டுவைத்து எறவானத்தில் தொங்கவிடவும், நெடுங்காலில் மாட்டவும் பயன்படுவது.]
[பொனக்கட்டை = பொனக்கட்ட = பொனாக்கட்ட]
– பொனக்கட்டயில சோறு போட்டு வச்சிகீறன் பாரு, போவும்போது எடுத்துனு போ.
– பொனக்கட்டில கூழ்கரச்சிக் குடிச்சாலே தனி ருசிதான்.