அரைநெஞ்சம்

துண்டிக்கப்பட்ட பல்லிவால்
சிதையுண்ட மண்ணுளித்தலை
நசுங்கிப்போன நாக்குப்பூச்சுடல்
இவற்றோடுசேர
காமம் கசந்தது
முதல் தடவையாக

புல்நுனிப் பனித்துளி
இலையிணை முசுடு
அழகெனினும்
ஒன்றுக்கு மட்டும் மகுடம்

விதையறியா மண்ணுக்கு
மரம்பற்றி அல்லது
கிளையிலை காய்கனிபற்றி
கவலையிருக்காது

என்றபோதும்
நினைவின் ஒழுகலில்
ஏனம் வைத்துப் பார்த்துக்கழித்தது
ஏதங்கொண்ட அரைநெஞ்சம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=