சொல்லன்றி எதுவுமற்றவன்! – 363
உங்கள் மனைவி குறித்து சொல்லுங்கள். கூடவே, அவர் உங்களது படைப்புருவாக்கத்திற்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்றும் சொல்லுங்கள்.
என் மனைவி கோமதி குறித்து ‘எங்க கல்யாணம்’ நூலில் மிக விரிவாக எழுதி இருக்கிறேன். ஓரளவுக்கு என்னுடன் சேர்ந்து புத்தகம் வாசிப்பவள். குறிப்பாக, வாரத்தில் ஒருநாள் என்போல நூலகம் வந்து முழுநாளும் படிப்பவள். நான் எழுதும் அனைத்தையும் முதல் ஆளாக வாசித்துவிட்டு கருத்து கூறுபவள்.
என் எழுத்துக்காக; நான் எழுதுவதற்காக பெரும் உறுதுணையாக இருப்பவள். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குப் பயணிக்கும் சூழலை எப்போதும் வழங்குபவள். இயன்முறை மருத்துவர். தொடர்ந்து இதழ்களில் மருத்துவக் கட்டுரைகள் எழுதுகிறாள். நேற்று அதிகாலையில் ஓர் அழகிய ஆண் மகவை ஈன்றிருக்கிறாள். என் விருப்ப சண்டைக்காரி. மனத்துக்குகந்த காதல்காரி. சக வாசிப்புக்காரி. இன்னும். இன்னும்.
[இன்னும்]
*