சொல்லன்றி எதுவுமற்றவன்! – 358
அப்படியெனில், நீங்கள் உங்கள் படைப்புகளை எவ்வாறு எழுதுகிறீர்கள்? கைப்பட பேப்பரிலா, அல்லது…
(கேள்வியை முடிக்கும் முன்பே கையமர்த்தி பேசத் தொடங்கியவர்) 95 சதவிகிதம் பேப்பரில் எழுதி, பின் கணினிக்கு மாற்றி எடிட் செய்கிறேன். மீத ஐந்து சதவிகிதம் நேரடியாகவே கணினி மற்றும் நகர்பேசி மூலமாக தட்டச்சு செய்து எழுதுகிறேன். அந்தந்த நேரத்துக்கு; வசதிக்கு ஏற்பவே இதனைக் கைகொள்கிறேன்.
(எதையோ சொல்லவந்து சிறு தயக்கத்திற்குப் பின்) என்னதான் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் பல வந்துவிட்டாலும், பேப்பர், பேனாதான் சிந்தனையோட்டத்திற்கு ஏற்ப வேகமாக எழுதிச் செல்ல கை கொடுக்கிறது. அதனால் முதலில் பேப்பரில் எழுதி, அதை கணினிக்கு மாற்றி எடிட் செய்வதையே அதிகம் விரும்புகிறேன்.
[இன்னும்]
*