சொல்லன்றி எதுவுமற்றவன்! – 346

தத்துவம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுவரையான தத்துவங்களில் எது உங்களுக்கு ஏற்புடையதாகப் படுகிறது?

தத்துவம் குறித்து மிக உயர்வாகவே நினைக்கிறேன். அது அவசியம் கலையிலக்கிய ரசனை மிக்கவர்களுக்கு அதிலும் குறிப்பாக, கலை இலக்கியத்தில் எதையேனும் செய்ய நினைப்பவர்களுக்கு வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இன்றைக்கு இருக்கக்கூடிய தத்துவங்களில் அத்வைதம் என்று சொல்லக்கூடிய இரண்டற்ற நிலை ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. இன்னும் இதனை ஆழ்ந்து கற்க விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு அமையுமா தெரியாது. பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 345

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=