சொல்லன்றி எதுவுமற்றவன்! – 345
இதனை ஒரு சாமானியனாகவே கேட்கிறேன். இவ்வளவு கடினப்பட்டு அதாவது, உயிரை பணயம் வைத்துப் போய் ஓரிடத்தை பார்க்க வேண்டுமா?
ஆமாம். அதன் முக்கியத்துவம் தெரிந்த என் போன்றவர்களுக்கு அதில் இருக்கும் கடினத்தைத் தாண்டி அது தரக்கூடிய பரவசமும், அதைக் கண்டபோது அடையும் உளஎழுச்சியும்தான் முக்கியம்.
நீங்கள் இந்தக் கேள்வியை ஒரு சாமானியனாக கேட்டதால், சாமானியர்களுக்கான பதிலாகவே சொல்கிறேன். எல்லோரும் கடினப்பட்டுப் போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கண்டு களிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.
இன்னொரு முக்கியமான விஷயம், இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லிடங்களுக்கு அதன் மதிப்பு அறியாதவர்கள் தயவுசெய்து போக வேண்டாம். காரணம், அதன் முக்கியத்துவமும், அது குறித்த அடிப்படை அறிவும் இல்லாதவர்களால்தான் இன்றைக்கு பல கலைப்பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பொறிவரை குகையையே எடுத்துக் கொள்வோமே. பல ஓவியங்களை மூடர்கள் வந்து அழித்திருக்கிறார்கள். காணவே மிக வருத்தமாக இருந்தது. அதனால்தான் சொல்கிறேன். சாமானியர்கள் யாரும் அவ்வளவு கடினப்பட்டு அதாவது, உயிரை பணயம் வைத்துப் போய் பார்க்க வேண்டாம். அதற்கானவர்கள் மட்டும் சென்று பார்த்தால் போதும்.
[இன்னும்]
*