சொல்லன்றி எதுவுமற்றவன்! – 344

நல்லவேளை பயணம் குறித்த பேச்சு வந்ததால் நினைவுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நீங்கள் சென்று வந்த பொறிவரை குகை ஓவியம் குறித்து சொல்லுங்கள்.

பொறிவரை குகை ஓவியம் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகப் பழமையான குகை ஓவியங்களில் ஒன்று. கோத்தகிரியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கரிக்கையூர் எனும் சிறு மலை கிராமத்தில் இருப்பது. அவ்வளவு எளிதில் செல்ல முடியாத யானை, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டெருமை முதலான விலங்குகள் பெருமளவு வாழும் இடம்.

சுமார் முன்னூறு ஓவியங்களுக்கு மேல் இருக்கும். யாவும் வெண் மற்றும் செந்நிற மண் கொண்டு தாவர உதவியுடன் இரு வண்ணங்களால் தீட்டப்பட்டது. இதன் காலம் சுமார் 5,000 ஆண்டுகளுக்குமேல் இருக்கலாம் என்கிறார்கள்.

அதிகமும் விலங்குகள். மாடு (காட்டெருமை), மான், யானை, குரங்குகள், நாய், நரி, புலி மற்றும் அடையாளம் காணமுடியாத இன்னும் சில விலங்குகள் (மாடுகள் கன்றுக்குட்டிகளோடு வரிசையாகச் செல்லும் ஓவியம் இங்குள்ள ஓவியங்களிலேயே மிகச் சிறப்பானது). அதற்கடுத்து மனிதர்கள். ஆண்களின் வேட்டைக் காட்சிகள். வீரச்செயல்கள். காளையை அடக்கும் சல்லிக்கட்டுக் காட்சி. விலங்குகளை பழக்கப்படுத்துதல். விலங்குகளோடு பயணித்தல். பெண்களின் நடனம். வரிசையாக தோள்மேல் கை போட்டுக்கொண்டு ஆடும் விளையாட்டுகள். நடுநடுவில் சூரிய உதயம் முதலான இயற்கை வர்ணனைகள். தாவரங்கள். பறவைகள். மீன்கள். ஆங்காங்கே சில குறியீடுகள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக செல்ல நினைத்த இடம். இந்தாண்டுதான் அதுவும், பல போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியப்பட்டது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 343

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=