சொல்லன்றி எதுவுமற்றவன்! – 328
தனிப்பட்ட முறையில் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன். இப்போதும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதினாறு கால் மண்டபம் அங்கே அழியாமல் உள்ளதா?
(உடனே பதில் சொல்லாமல் தலையை கீழே தொங்கப் போட்டு, சில நொடிகளுக்குப் பின் உயர்த்தி ஆட்டியபடி ‘இல்லை’ என்றவர், எதையோ தனக்குள் யோசித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தொடர்ந்தார்.)
ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த சோழ மன்னன் ஒருவன், ஒரு தமிழ்ப் புலவனுக்காகத் தந்த அந்தப் பதினாறு கால் மண்டபத்தினை, அதற்குப்பின் கி.பி.1216 ஆம் ஆண்டு அதாவது, சுமார் 1200 ஆண்டுகள் கழித்து பகையோடு வந்த ஒரு பாண்டிய மன்னன் அழிக்காமல் போற்றி விட்டுப்போனதை, அதற்கும் பின்னானவர்கள், மொத்த தமிழ்ச் சமூகமும் வெட்கித் தலைகுனியும்படி இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டார்கள்.
பேராசை என்னும் அற்ப குணம் கொண்ட நம்மவர்கள், எது கிடைத்தாலும் அபகரிப்பதையே வேலையாக வைத்திருப்பவர்கள், இந்த வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மண்டபத்தையும் அபகரித்து வாயில் போட்டுக்கொண்டது பெரும் துயரம் மிக்கது. ஒரு தமிழனாய் என்னை எப்போதும் தலைகுனிய வைப்பது.
[இன்னும்]
*