சொல்லன்றி எதுவுமற்றவன்! – 324

வித்யாரண்யர் குறித்தும், விஜயநகரம் பற்றியும் சொன்னதால் இக்கேள்வி. சென்றாண்டு விஜயநகரைக் காணவே ஹம்பி சென்று வந்தீர்கள் அல்லவா?

ஆமாம். அதற்கும் காரணம் வித்யாரண்யர்தான். அவர் குறித்து எங்கோ ஒரு கட்டுரையில் போகிற போக்கில் படித்துவிட்டு வியந்துபோனேன். பின் அதிலிருந்து அவர் பற்றி இன்னும் தேட, அது என்னை விஜயநகரம் நோக்கி வருமாறு அழைத்தது. உடனே நண்பர் ஒருவரை உடன் கூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

எங்கு பார்த்தாலும் கோயில்களும், சிற்பங்களும், தூண்களும், மண்டபங்களும்தான். அவற்றில் மிகுதியானவை சிதைந்த நிலையில் இருப்பவை. எனினும், கலை ரசனை குன்றாதவை. காணக் காணச் சலிக்காதவை. ஐந்து நாட்கள் தங்கியிருந்து, காலை முதல் மாலை வரை அழகிய வேலைப்பாடுகள் மிக்க சிற்பங்களுடனும், கட்டடங்களுடனும், தூண்களுடனும் வாழ்ந்தோம். அவையெல்லாம் ஒருபோதும் முழுதாகப் பார்த்துத் தீர்க்க முடியாதவை என்பதை உணர்ந்ததால், பின் அங்கிருந்து வர மனமின்றி கிளம்பினோம்.

வழி நெடுக சுவாமி வித்யாரண்யர் என்னும் ஒற்றை மனிதர், இரு சகோதரர்கள் மனத்தில் ஊன்றிய வார்த்தை விதை எத்தனை வீரியம் மிக்கதாக இருந்திருந்தால், அது இத்தனைப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும்; அதன் அடிநாதமாக கலை இருந்திருக்கும் என்ற எண்ணத்தோடவே வீடு வந்து சேர்ந்தோம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 323

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=