சொல்லன்றி எதுவுமற்றவன்! – 280

நீங்கள் வாரந்தோறும் செல்லும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கூடவா?

ஆமாம். நான் இந்தளவுக்கு நூலகங்களை வெறுக்க முக்கியக் காரணமே அண்ணா நூற்றாண்டு நூலகம்தான்.

ஒரு நூலகம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இதனைச் சொல்லலாம். ஆஹா ஓஹோ என்று சொல்லும் எந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒருநாள் கூட இந்நூலகத்தை வந்து உருப்படியாக பயன்படுத்தி இருக்கமாட்டார்கள்.

கடந்து 2012 முதல் பயன்படுத்தி வருபவன் என்ற முறையில், நூலகத்திற்கு என்று இருக்கும் மிக அடிப்படை விதிமுறையான ‘நூலகத்துள் பேசக்கூடாது’ என்பதையே தெரியாத மூடர்களை தேடித்தேடி மிகுதியாகப் பணியில் அமர்த்தியுள்ள ஒரே நூலகம் இதுதான் என்று சொல்வேன். வீட்டுக்கதை, ஊர்க்கதை, சொந்தக் கதை, சோகக்கதை எல்லாமே இங்கே வந்துதான் பேசுவார்கள். படிக்க வந்தவர்களை ‘ஏன்டா படிக்க வந்தோம்’ என்று வெறுத்துப்போய் ஓடவைப்பார்கள்.

குடிக்க சரிவர தண்ணீர் இருக்காது. அப்படியே இருந்தாலும் அதைப் பிடித்துக் குடிக்க தம்ளர் இருக்காது. நூலக வளாகத்தில் இருந்த உணவகம் மூடி பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னவரைக்கும் திறக்கவில்லை. அதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. பேருக்குதான் தமிழகத்தின் மிகப்பெரிய நூலகம், பிரமாண்டம், இத்தனை லட்சம் புத்தகங்கள் கொண்டது, அது இது எல்லாம். சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான நூல்கள் அதிலும் குறிப்பாக, ஓர் அப்டேட்டும் இல்லாத நூலகம் இது.

‘சரி இவங்கதான் புது புத்தகம் வாங்கி வைக்கமாட்றாங்களே… நாமளாவது போய் கொடுப்போம்’ என்றால், அதையும் வாங்கி வைக்கமாட்டார்கள். கேட்டால் பொறுப்பற்ற பதில்களே வரும். ஒவ்வொருதடவை நூலகத்துக்கு சென்று வரும்போதும் இதுதான் தோன்றும். ‘பேசாம இங்க வேலைக்கு வைத்திருப்பவங்கள எல்லாம்… மாடு மேய்க்க அனுப்பி இருக்கலாம்.’

விட்டால் இன்னும் பக்கம் பக்கமாக சொல்வேன். அவ்வளவு உள்ளது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 279

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=