சொல்லன்றி எதுவுமற்றவன்! – 278
எனினும் இப்போதைய தி.மு.க. ஆட்சி வாசிப்புப் பழக்கம் மேம்பட பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறாதே?
ஹாஹா… மேற்கொண்டு என்ன பிரயோஜனம்? அது சிறப்பாக நடக்கிறதா, அதற்கான நோக்கம் நிறைவேறுகிறதா என்பதுதானே முக்கியம். என்னைப் பொறுத்தவரை அப்படி ஒன்றும் நிகழவில்லை. நான் முன்னமே சொன்னதுதான் காரணம். தகுதியற்றவர்களைக் கொண்டு என்ன செய்தாலும் சரி. அதனால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை.
ஆகையால் திமுக என்றில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, கட்சி சாராத நபர்களை, போலியானவர்களை, ஆதாயம் தேடுபவர்களை தயவு தாட்சன்யமின்றி ஒதுக்கிவிட்டு, தகுதியான நபர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து நன்முறையில் முன்னெடுத்தால் மட்டுமே மாற்றம் நிகழும். இல்லையென்றால் துரும்பு கூட அசையாது.
[இன்னும்]
*