சொல்லன்றி எதுவுமற்றவன்! – 277

அது ஏனென்று சொல்லவில்லையே?

ஹாஹா… சொல்வதற்குதான் வந்தேன். அதற்குள் அவசரப்பட்டு அடுத்தக் கேள்வியாக கேட்டு விட்டீர்கள். சரி, சொல்கிறேன்.

இங்கே ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது முழுக்க முழுக்க அக்கட்சியைச் சார்ந்த படைப்பாளிகளை அல்லது ஆதரிக்கும் படைப்பாளிகளை, போலி ஆதாயம் தேடுபவர்களை விட்டுவிட்டு தகுதியானவர்களை, அவர்கள் யார் என்றாலும் சரி, தேடித் தேடி எப்போது பணியில் அமர்த்தி ஆத்மார்த்தமாக செயல்படுகிறதோ அப்போதுதான் இந்நிலை ஓரளவுக்காவது மாறும்.

இந்த எண்ணம் முதலில் கட்சிகளின் தலைமைகளுக்கு வரவேண்டும். (அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் உண்டா? என்பது தனிக் கேள்வி.) அடுத்தது, இதுபோன்ற பணிக்கு தம்மை நியமிக்கும்போது படைப்பாளிகள் தம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, மிகக் குறைந்தபட்ச அறத்துடனாவது நடக்க வேண்டும். அதாவது, தம்மைக் காட்டிலும் தகுதியுள்ள படைப்பாளிகளை அப்பணியில் அமர்த்தச்சொல்லி துணிந்து கூறவேண்டும்.

‘இது எல்லாம் அதுவும், இந்த தமிழ்நாட்டில் நடக்கும் காரியமா?’ என்று கேட்கவேண்டாம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது ஓரளவுக்கு இப்போது உள்ளவர்களை எண்ணிப் பார்த்தாலே எளிதில் புரிந்துவிடும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 276

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=